GuidePedia

தேசிய அரசாங்கத்தின் அமைச்சுக்களின் செயலாளர்களாக இளைஞர்கள் மற்றும் செயற்திறன் மிக்கவர்கள் நியமிக்கப்படவேண்டுமென, பிரதமர் ரணில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளை வகித்து வந்த சுமார் 14 அமைச்சுக்களின் செயலாளர் பதவிகள் பறிபோகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக செயற்பட்டவர்களுக்கே, இந்நிலை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த, மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தீவிர விசுவாசிகளான சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர், ஏற்கனவே அவர்களது பொதுச் செயலாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இவர்களுள் சுசில் பிரேமஜயந்த பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அநுர பிரியதர்ஷய யாப்பா பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பான விசாரணை நாளைய தினம் நீதிமன்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Top