இலங்கை வந்துள்ள இந்திய அணியுடனான 03 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிகளை பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையினால் விடுக்கப்பட்டுள்ள இவ்வறிவித்தலில், இன்று (28) நடைபெறவுள்ள இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியினை பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கண்டுகளிப்பதற்கான அனுமதி இலவசம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த போட்டியினை காண்பதற்காக வரும் மாணவர்கள் தங்களது பாடசாலை சீருடையில் வருவது கட்டாயம் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தொடரில் தலா ஒவ்வொரு வெற்றிகளைப் பெற்றுள்ள இரு அணிகளுக்கும் இன்று நடைபெறவுள்ள இப்போட்டி தொடரைத் தீர்மானிக்கவுள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும்.