GuidePedia

(க.கிஷாந்தன்)

இலங்கை சுற்றுலா சபை, இலங்கை தேயிலை சபை மற்றும் இலங்கை விமான சேவை ஆகியன இணைந்து தோட்டத் தொழிலாளர்கள் மூலம் புதிய கின்னஸ் சாதனை பயணத்தை 28.08.2015 அன்று ஆரம்பித்துள்ளனர். 

நுவரெலியா பீட்ரு தோட்டத்தில் 500 கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களைக் கொண்டு ஒரே நாளில் 2 மணித்தியாலங்களுக்குள் 3000 கிலோ கிராம் கொழுந்து பறித்து அதில் தூள் தயாரித்து 35,000 பேருக்கு தேநீர் வழங்கி இந்த கின்னஸ் சாதனை புரியப்படுகிறது. 


29.08.2015 அன்று கண்டி எசல பெரஹரா காண வருபவர்களுக்கு 35,000 கோப்பை தேநீர் வழங்கி கின்னஸ் சாதனை படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 
Top