GuidePedia

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் காதல் விவகாரத்தில் தலையிட்டு கண்டித்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தரும் அவரது காதலியும் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வவுனியா, மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரணில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் (வயது 23) வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த யுவதி (வயது 20) ஒருவரை காதலித்துள்ளார். 
இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில தினங்கள் காதலர்கள் இருவரும் கதைக்காது இருந்த சந்தர்ப்பத்தில் குறித்த விடயம் தொடர்பில் காதலி வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து காதலனான பொலிஸ் உத்தியோகத்தரை அழைத்து கடுமையான வார்த்தைகளால் பொலிஸ் அதிகாரி பலர் முன்னிலையில் திட்டியதால் மனஉளைச்சலுக்கு உள்ளாகி, சனிக்கிழமை தற்கொலை செய்வதற்காக மருந்து குடித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து, காதலன் மருத்து குடித்த தகவல் அறித்த காதலி இன்றைய தினம் தற்கொலை செய்ய மருத்து குடித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



 
Top