GuidePedia

(க.கிஷாந்தன்)
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 28.08.2015 அன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சிறு காயங்களுடன் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது….

அட்டனிலிருந்து பொகவந்தலாவை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ் ஒன்றும் பொகவந்தலாவையிலிருந்து அட்டன் வட்டவளை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் பொகவந்தலாவ அந்தோனியார் திருச்சபைக்கு முன்பாக நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 28.08.2015 அன்று காலை 06.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்தே ஒருவர் இவ்வாறு சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் மேற்படி இரு வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



 
Top