GuidePedia

எதிர்வரும் மாதம் 02ஆம் திகதி புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளின் பதவிப் பிரமாணம் இடம்பெறவிருந்தன. எனினும் எதிர்வரும் 04ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அநேகமாக எதிர்வரும் 03ஆம் திகதி அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கும் யோசனை ஒன்று நாடாளுமன்றில் முன்வைத்து எதிர்வரும் 04ஆம் திகதி பதவிப் பிரமாணம் இடம்பெறவுள்ளதாக குறித்த தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் எதிர்வரும் 02ஆம் திகதி இடம்பெறாதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64வது ஆண்டு விழா எதிர்வரும் 02ஆம் திகதி இடம்பெறவுள்ளமையே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.



 
Top