GuidePedia

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து செப்டம்பர் முதலாம் திகதி நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படவுள்ளவர் யார் என்பது குறித்து நாடாளுமன்றம் கூடியபின் ஐ. ம. சு. மு.செயலாளர் எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவிப்பார். அதற்குள்ளாக அவசரப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் குறித்து அறிவிப்புகளை வெளியிட வேண்டியதில்லை என்றும் சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து கடந்த தினங்களில் பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. எஸ். பி. திசாநாயக்க, குமார வெல்கம ஆகியோரின் பெயர்கள் பரவலாக பேசப்பட்டதோடு தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தது.
ஆனால் இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த மஹிந்த சமரசிங்க, எதிர்க்கட்சித் தலைவரை அறிவிக்கும் உரிமை ஐ. ம. சு.மு. செயலாளருக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார். செப்டம்பர் முதலாம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனையே சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் மீள உறுதிப்படுத்தியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெரும்பாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தன்வசம் வைத்திருக்கும் என அறியக் கிடைத்துள்ளது



 
Top