GuidePedia

அமைச்சுப் பதவிகளை பகிர்ந்தளிக்கும் போது எதிரெதிர் கட்சிகளின் உறுப்பினர்களை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்களாக நியமிக்கும் யோசனை தோல்வியைத் தழுவியுள்ளது.
தேசிய அரசாங்கத்தின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கும் வகைகயில் இந்த யோசனை புத்திஜீவிகளால் முன்வைக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் அமைச்சர் பதவி ஒரு கட்சியைச் சேர்ந்தவருக்கும், பிரதியமைச்சர் பதவி மறுகட்சியைச் சேர்ந்தவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ஐ.தே.க. - சுதந்திரக் கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தின் செயற்பாடு அதிகரிப்பதுடன், ஊழல், மோசடி போன்ற முறைகேடுகளும் தவிர்க்கப்படும் என்றும் கூறப்பட்டது.
எனினும் எதிரெதிர் அரசியல் வழக்கம் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமன்றி சுதந்திரக் கட்சியும் இந்த யோசனையை நிராகரித்துள்ளது.
இதன் மூலம் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள போதும், அரசியல் கட்சிகளின் எதிரி மனப்பாங்கு முற்றாக கைவிடப்படவில்லை என்று புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



 
Top