(க.கிஷாந்தன்)
விஷம் அருந்தி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவரிடமிருந்து கஞ்சா போதைபொருள் 3 பக்கட்கள் கடந்த 27ம் திகதி கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி சந்தேக நபரை அட்டன் பதில் நீதவான் தமயந்தி பெர்ணாண்டோ ஜம்பதாயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் நோர்வூட் ஸ்டொக்கம் பகுதியை சேர்ந்த பெரியசாமி இராஜேந்திரன் 39 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 27ம் திகதி ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தில் வைத்து ஏற்பட்ட காதல் விவகாரத்தால் விஷம் அருந்தியுள்ளார். அதன் பிறகு அவரை அட்டன் பொலிஸார் டிக்கோயா மவாட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவரை பொலிஸார் பரிசோதனை செய்யும் போது அவரிடமிருந்து கஞ்சா பக்கட்கள் மூன்றினை கைப்பற்றியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அட்டன் பொலிஸார் அட்டன் பதில் நீதவானிடம் கூறிய போது பதில் நீதவான் தமயந்தி பெர்ணாண்டோ 29.08.2015 அன்று வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின் இவ்வாறு சரீர பிணையில் விடுவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.