(க.கிஷாந்தன்)
பொகவந்தலாவையில் பாடசாலை மாணவி ஒருவரை வேனுக்குள் வைத்து குறித்த நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
பொகவந்தலாவையில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவியே பாதிக்கப்பட்டவராவார்.
பொகவந்தலாவையிலிருந்து குயினா தோட்டம் வரை பயணிகளை ஏற்றிச்சென்ற வேன் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மேற்படி மாணவியின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கின்றார்.
அத்தோடு குறித்த மாணவியை வைத்திய பரிசோதனைக்காக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
சம்பவத்தில் 54 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு ஈடுப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
பொகவந்தலாவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.