புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைக்கமைய முன்னணிக்கு 110, 115 ஆசனங்கள் பெற்று கொள்வதற்கான வாய்புகள் காணப்படுவதாக தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மஹிந்த பிரமதர் ஆனால் தனக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும் என்ற அச்சத்தினாலேயே மஹிந்தவுக்கு எதிராக கடிதம் ஒன்றை வெளிட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
எங்கள் புலனாய்வுப் பிரிவு ஊடாக முன்னணிக்கு 110, 115 ஆசனங்கள் கிடைக்கும் என நான் அறிந்து கொண்டேன். இதன் போது தான் முன்னணியின் முன்னாள் அரசியல்வாதிகள் சிலர் எனது பெயரைக் கூறி அரசியல் மேடைகளில் கூச்சலிட ஆரம்பித்தார்கள்.
சிலர் மஹிந்தவை வெற்றி பெற செய்து பிரதமராக்கியதன் பின்னர் எனக்கு எதிராக செய்யப்போவதனையும் பகிரங்கமாக கூற ஆரம்பித்து விட்டார்கள். எனக்கும் அச்சம் ஏற்பட்டு விட்டது.
இதன் போது தான் அவ்வாறான கடிதம் ஒன்றை வெளியிட்டேன். முன்னணி மற்றும் சுதந்திர கட்சி செயலாளர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும், மஹிந்தவுக்கு பாதகமான வகையில் உரையாற்றவும் நேரிட்டது.
சில சந்தர்ப்பங்களில் முன்னணியின் எதிர்கால பயணத்திற்கு இதன் மூலம் அழுத்தம் ஏற்படும் என்று எனக்கு தெரியும், என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.