சவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புத் தொகுதியொன்றில் இன்று காலை பாரிய திப்பரவல் ஏற்பட்டள்ளது. இதில் 11 பெர் உயிரிழந்துள்ளதடன் கிட்டத்தட்ட 200 பெர் காயமடைந்துள்ளாதாக அந்நாட்ட பிரபல ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டள்ளது.
இதே நிலையில் தீப்பரவலில் எந்தவொரு இலங்கையருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
அவ்வாறான விபத்தொன்றில் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்பட்டதற்கான தகவல்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என ரியாத்திலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஆணையர் பீ.கே.டி.ஹெட்டிஆராய்ச்சி தெரிவித்தார்.
சவுதி அரேபிய குடிமனை வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக ஆறு பேர் பலியானதுடன், 200 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ள சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயப்பட்டவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அதிகாரிகள் சிலரி நிலை கவலைக்கிடமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.