GuidePedia

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்யும் விடயத்தில் இறுதித் தீர்மானமொன்றை எடுப்பதற்கான கலந்துரையாடலுக்கு சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் போது பெரும்பாலும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்த அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால ஆகியோர் இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குவது குறித்து பரிசீலித்துள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
தற்போதைக்கு அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தில் இரண்டு வருடங்களுக்கு மாத்திரமே இணைந்திருக்கவும், அதன் பின்னர் நாடாளுமன்ற பிரதான எதிர்க்கட்சியாக செயல்படவும் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் தீர்மானித்திருப்பதாகவும் குறித்த தகவல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது.



 
Top