GuidePedia

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை கூடவுள்ள 8 வது நாடாளுமன்ற கூட்டம் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் தேசிய அரசாங்கம் என்ற வகையில் எதிர்காலத்தில் செயற்படும் விதம், கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள், குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
அதேவேளை கரு ஜயசூரியவை சபாநாயகர் பதவிக்கு முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



 
Top