GuidePedia

(நஜீப் பின் கபூர்)
இஸ்லாம் பாடநூல் விவகாரம் தொடர்பாக என்னால் எழுதப்பட்ட செய்திக் குறிப்புத் தொடர்பாக சிலர் சந்தேகக் கண்கொண்டு நோக்குவதும், இது விடயத்தில் பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு நான் விரல் நீட்டியதும் இன்னும் சிலருக்கு வலியைக் கொடுத்திருக்கின்றது என்பதனை உணர முடிகின்றது.

பொதுவாக நான் ஊடகங்களுக்கு எழுதுகின்ற கட்டுரைகள், குறிப்புக்கள் தொடர்பாக விமர்சிப்பவர்களுக்கோ அல்லது பின் குறிப்புச் சொல்பவர்களுக்கோ பதில் கொடுப்பது எனது வழக்கத்தில் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கு எட்டிய வகையில் அவற்றை எடுத்துக் கொள்ளட்டும் என்பது எனது நிலைப்பாடாக இருக்கின்றது.

பாடநூல்-இது சமூகமும் சமயமும் சார்ந்த விவகாரமாக இருப்பதால் ஒரு குறிப்பை எழுதலாம் என்று தோன்றுகின்றது. மேலும் ஞானம் போன்றவர்களிடத்தில் கேள்விகளை எழுப்பும்போது அதிலே குழம்பிப் போகின்ற நமது சமூத்தில் முல்லில் போட்ட லையை எடுக்கின்ற நிலையில்தான் வார்த்தைகளை வெளியிட வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும்.

மேலும் ஞானம் போன்ற ஒரு வம்பனுக்கு விளம்பர கொடுப்பது சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுப்பது போன்ற விடயம் எனவே ஊடகங்களுக்கு அந்த ஆள் பற்றி எனக்கு எழுத நாட்டமில்லை. இந்தப் பாட நூல் விவகாரம் சமூகம் சார்ந்த விடயம்; மட்டுமல்லாது முஸ்லிம்களின் இருப்புத் தொடர்பான ஒரு விவகாரமாக இருப்பதால்தான் அதனை சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்தோன் என்ற குறிப்போடு:-   

இஸ்லாம் பாட நூல் பகுதி -2

01.இது போன்ற விடயங்களில் தனி மனிதர்களை விடவும் பொறுப்புக் கூறவேண்டிய அமைப்புக்கள் கேள்வி எழுப்புவது கனதியாக இருக்கும் என்ற நோக்கில் சில அமைப்புக்களைக் குறிபிட்டிருந்தோன்.

02.நேற்று இரவு 10.00 மணி முதல் பின்னிரவு வரை  
ஹிரு தொலைக் காட்சியில் இந்த விவாதம் நடந்தது.

03.எனது கதை கற்பனை என்று எண்ணுகின்றவர்கள், அந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் போய் 750 பணம் கொடுத்தால் அந்த விடியோ நாடவை வாங்கி, தமது வீடுகளில் சந்தேகம் தீரும்வரை போட்டுப் போட்டுப் பார்க்கலாம்.

04.மேலும் ஒரு கற்பனைச் செய்தியை இப்படி எழுதி சமூகத்தின் உணர்வுகளை தூண்ட வேண்டி எந்தத் தேவையும் எனக்கில்லை.

05.பிழையான ஒரு தகவலைச் சொல்லி மூக்குடைபட்டுக் கொள்ள விரும்புகின்ற ஒரு ஊடகக்காரன் நானல்ல என்பது இந்த இணையத்தின் ஆசிரியருக்கு நன்றாகத் தொரியும்.

இன்னும் சந்தேகம் கொள்பவர்களுக்கு மேலும் சில தகவல்களைச் சொல்லலாம் என்று எதிர் பார்க்கின்றறேன்.

நான் இந்த விவகாரத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வது தொடர்பாக தற்போது இந்தப் பாடநூலுக்குப் பொறுப்பான ...... அதிகாரிக்கு கொடுத்திருந்த தகவலின்படி 25.08.2015 மிகச் சரியாக பி.ப. 1.51க்கு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரிடத்தில் நான் இதுபற்றி  கேள்வி எழுப்பிய போது நான் புதிதாக இந்தப் பதவிக்கு வந்ததாகக் குறிப்பிட்டதுடன் தவறுகள் இருந்திருக்கின்றது, அதனைத்தான் திருத்தி இருக்கின்றோம். 

அது ஒரு பெரிய விவகாரம் அல்ல என்ற தோரணையில் கதைத்ததுடன் அவர் தொழில் பார்க்கும் இடத்தில் நான் எழுதுகின்ற  வார்த்தைகள் நெருக்கடிகளைக் கொடுக்கும் என்பதால் எனக்குள்லேயே ஒரு தனிக்கையைச் செய்து கொண்டு நான் அவரிடத்தில் எழுப்பிய சில கேள்விகளுக்கு அவர் தந்த பதிலைத் தருவதை விட எனது கேள்வியை மட்டும் இங்கு குறிப்பிடலாம் என்பது எனது நிலைப்பாடு.

பொது பல சேனாக்காரர்கள் கண்டு பிடிக்கும் வரை இந்தத் தவறுகள் சரி செய்யப்படாதது ஏன்?

ஞானம் சொல்கின்ற விவகாரம் சின்னச் சின்ன தவறுகள் என்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது அவர் முஸ்லிம்களின் இருப்பு வரலாறு பற்றிய விடயத்தில் அல்லவா கை வைத்திருக்கின்றார். இது எப்படி சின்ன விவகாரம்?

ஞானம் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு நீண்ட வரலாறு கிடையாது என்ற விடயத்தில் திருத்தம் செய்திருப்பதாக குறிப்பிடுகின்றாரே?

இஸ்லாம் பாடப் புத்தகத்தில் மட்டுமல்ல சிங்கள வரலாற்றுப் புத்தங்களில் கூட முஸ்லிம்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கான வரலாறு இந்த நாட்டில் இருக்கின்ற என்று குறிப்பிடுகின்றது. அது உங்களுக்குத் தெரியாதா?

இஸ்லாம் பாட நூலில் முஸ்லிம்களின் நீண்ட வரலாறு பற்றிய கதையை தான் அழித்து விட்டதில் அவர் ஊடங்கள் முன் தனது அமைப்பு பெரும்பான்மை சமூகத்திற்குப் பெற்றுக் கொடுத்த ஒரு பெரு வெற்றி என்று சொல்லும்போது முஸ்லிம் சமூகம் அதை ஒரு சின்ன விவகாரமாக எப்படிப் பார்க்க முடியும் என்று கேட்டால்....அவர் தந்த பதில்...! 

இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை அவர்கள் அதிகாரிகள் இந்த நாட்டில் கடந்த காலங்களில் இருந்த அட்டகாசங்களின் முன் அவர்கள் அடங்கி இருந்திருப்பார்கள் என்பதனையும் இஸ்லாம் பாடநூல் விவகாரத்தில் ஞானம் திருத்தங்களைச் செய்யும் பின்புலம் அன்று இருந்தது என்பதும் முஸ்லிம்களுக்குப் புரியதாத விடயமல்ல!

எமது சமூகம் எவ்வளவு தூரம் ஏமாளிகளாக இருக்கின்றது என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே!

இஸ்லாம் பாட நூலில் திருத்தங்கள் விடயத்தில் அவர் வெற்றி பெற்றிருக்கலாம் அது எமது ஏமாளித்தனம் என்று ஏற்றுக் கொள்வோம்.

ஞானத்துக்கு ஒரு சவால்

அதே நேரம் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஆயிரக்கணக்கான வருடகால வரலாறு இல்லை என்று சொல்கின்ற ஞானத்துக்கு நாம் இப்படி ஒரு சவாலை விடுகின்றோம்.

நீங்கள் இஸ்லாம் பாடநூலில் அழித்து விட்டதாகச் சொல்கின்ற அதே விவகாரம் 10 தர வரலாற்றுப் பாட நூலில் 4ம் பக்கத்தில் பண்டைய சமூகம் என்ற பாடப் பரப்பில் இன்றும் முஸ்லிம்களுக்கு 1000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு இருக்கின்றது என்பதனை பேராசிரியர்  ராஜ் சோமதேவ (இவர் பழம் பெரும் தொழ்பொருள் ஆய்வாளர்) என்ற உங்களது இனத்தவரே கி.பி. 845 வருடகாத்து ஒரு சம்பவத்தில் அடித்துச் சொல்லி இருக்கின்றாரே! முடியுமானால் நீங்கள் அதில் திருத்தங்களை செய்து காட்டுங்கள் பார்க்கலாம்.

இஸ்லாம் பாடப் புத்தகத்தில் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு 1000 ம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு என்று சொன்னால் உங்களுக்கு வலிக்கின்றது.

அதே நேரம்  பாடசாலை வரலற்றுப் புத்தகத்தில் அந்தக் குறிப்புக்கள் இருந்தால் அது உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை. 

இஸ்லாத்தில் பிழை தேடுவதுதானே உங்கள் தொழில் என்று நாங்கள் அவருக்கு பதில் கொடுக்கலாம். 

இதே நிகழ்ச்சியில் முஸ்லிம்களிடம் ஆயுதக் குழுக்கள் இருக்கின்றது என்ற தகவலைத் எமக்குத் தந்தவர்கள் என்று இரண்டு முஸ்லிம்களின்  நாமங்களை அவர் வழக்கம் போல் நிகழ்ச்சியில் உச்சரித்தார். இவர்களும் நமது அரசியல் தலைவர்கள் என்ற அந்தஸ்தில் இருப்பவர்கள் என்பது அடுத்த வேடிக்கை! 

1960களில் ரஷ்யாவும் அமெரிக்காவும் விண்ணுக்கு ரக்கட்டுக்களை ஏவிக் கொண்டிருந்த நாட்களில் புகழ் பெற்ற கெய்ரோ அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கூடிய நமது உலமாக்கள் காகத்தின் இரைச்சி ஹரமா ஹலாலா என்பது பற்றி தமக்குள் பெரும் விவாதங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள் என்ற குறிப்பை இதற்கு ஒரு பதிலாகப் பதியலாம் என்று தோன்றுகின்றது. 

ஒரு யூதனால் முஸ்லிம்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஐஎஸ்ஐஎஸ்சுக்களை இஸ்லாமிய போராட்டக்காரர்கள் என்று கணக்குப் பேடுகின்றவர்கள்தானே நாம்.! இதுதான் சமூக நிலை!  புரிகின்றதா சகோதரர்களே..?

-JM



 
Top