மாத்தறை மாவட்டம் பண்டத்தர பாலத்தில் ஏறி, நில்வளா கங்கையில் பாய்ந்து பௌத்த துறவியொருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என மாத்தறை மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலையே அவர் இந்த முயற்சி மேற் கொண்டார் எனவும்,
இத் துறவிக்கு, 83 வயது என்றும். காலி, பத்தேகம பிரதேச விகாரையில் பணியாற்றிய வந்தவர் என்றும். திடீரென அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அவரின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் தெரியவில்லை என்கின்றனர் பொலிஸார்.
எனினும், குறித்த துறவியைத் தேடும் நடவடிக்கையில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.