மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளுக்கு சர்வதேச சமூகத்தின் தொழில்நுட்பசார் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உளவியல் , சமூக ரீதியான உதவிகளை பெற்றுக் கொள்ளல், உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தில் மற்றும் மீள்குடியேற்றல் நடவடிக்கைகள் என்பன தொடர்பில் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.அண்மையில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்ளவும் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்ட கால அடிப்படையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.