GuidePedia

உள்ளுராட்சி தேர்தல்களில் உரியமுறையில் களமிறங்குவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கவனம் செலுத்தியுள்ளது.
கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இதனை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் பெரும்பாலும் தொகுதி மற்றும் விகிதாசார முறையில் இடம்பெறவுள்ளது.
இந்த முறையின் கீழ் மூன்றில் இரண்டு பகுதி உறுப்பினர்கள் தொகுதிவாரி மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இந்தநிலையில் தேர்தல் தொகுதிகளில் பிரசாரங்களை முன்னெடுப்பது குறித்து கட்சி குழு ஒன்றை நியமித்துள்ளதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக்குழு தொகுதி அமைப்பாளர்கள் உட்பட்ட விடயங்களை ஆராய்ந்து எதிர்வரும் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் என்று திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தக்குழு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 64 வது சம்மேளனம் எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெற்ற பின்னர் கூடி நிலைமைகளை ஆராயவுள்ளது.



 
Top