GuidePedia

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையான சர்வாதிகாரி என்ற போதிலும் கட்சிக்காக உழைத்தவர் என  தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எனினும், ரணில் தரப்பு எதிர்பார்க்கும் வகையில் நாட்டை ஆட்சி செய்ய முடியாது.  வால் தலையை வழிநடத்தும் நிலைமையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் அமைச்சுப் பதவிகளை துரத்திச் செல்லப் போவதில்லை.

நான் எடுக்க வேண்டிய தீர்மானம் குறித்து குருணாகல் மாவட்ட மக்களிடம் கேட்டறிந்து கொள்வேன்.

கல்வி, பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்கு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஒத்துழைப்பு வழங்க முடியும்.

நல்ல திட்டங்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கப்படும். ஊழல், மோசடிகள், குற்றச் செயல்கள் சமூக விரோ செயற்பாடுகளுக்கு நாடாளுமன்றிற்கு உள்ளேயும் வெளியேயும் குரல் எழுப்பப்படும் என தயாசிறி ஜயசேகர கொழும்பு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.



 
Top