இலங்கையின் இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது மனைவி, மகள் ஆகியோர் ராணுவ ஷெல்வீச்சில் உயிரிழந்ததாகவும் ....
அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறி இலங்கை அரசுடன் கை கோர்த்த முன்னாள் அமைச்சர் கருணா் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா.
இவர் இலங்கை அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷவுடன் கருணா கை கோர்த்துக் கொண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவரானார் துணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் கருணாவை சுதந்திர கட்சி போட்டியிட அனுமதிக்கவில்லை. நியமன எம்.பி.யாகவும் நியமிக்கவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிபரீட்சை நிகழ்ச்சிக்கு கருணா அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்….