GuidePedia


புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை நிகழ்த்த உள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி எட்டாம் நாடாளுமன்றின் முதல் அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்க உள்ளார். புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்த உள்ளார்.
எட்டாம் நாடாளுமன்றின் முதல் அமர்வு 1ம் திகதி 9.30 அளவில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது. முதலாவது நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது. பிரதி சபாநாயகர், அவைத்தலைவர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா, எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் உள்ளிட்டவர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதன் பின்னர் புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார் என நாடாளுமன்றின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



 
Top