(ஜிப்ரி சலாம்-கிண்ணியா)
கிண்ணியாவின் பொருளாதாரத்தில் மீன்பிடி ஒரு முக்கியாமான பங்கினை வகிக்கின்றது கடந்த ஒர சில மாதமாக இங்கு வாழும் மீனவர்கள் உறிய முறையில் மீன்பிடியினை மேற் கொள்ள முடியாமல் கடும் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்
ஆனால் தற்போது இந்த நிலமைகள் சிறு மாற்றத்தை கண்டுள்ள நிலையில் மூன்று நாட்களாக பாரியளவான சூறை மீன்கள் பிடிக்கப்பட்டது வருகின்றன முதல் நாள் 40000ம் கிலோவுக்கு மேலதிகமான மீன்கள் பிடிக்கப்பட்டு ஒரு கிலோ மீன் 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன
ஆனால் தற்போது மீன்களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக ஒரு கிலோ மீன் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதனால் மீனவர்கள் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக கூறப்படுகின்றனர்.