GuidePedia

(க.கிஷாந்தன்)

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை - நுவரெலியா பிரதான வீதியில் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 04 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இவ்விபத்து 28.08.2015 அன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து இருந்து பதுளை நோக்கி சென்ற வேன் ஒன்றே இவ்வாறு தனது வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பதுளை – நுவரெலியா பிரதான வீதியில் ஹாலிஎல அம்பவக பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி வேனில் சிறுவர்கள் உட்பட 15 பேர் பயணித்துள்ளனர். விபத்தில் படுங்காயமடைந்த 4 பேரும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை குறித்த வேணுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் மாத்தறை பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலாவிற்கு வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



 
Top