GuidePedia

பேஸ்புக்கின் “மூமென்ட்ஸ்” என்கிற அப், போனில் இருக்கும் கேமரா புகைப்பட தொகுப்பிலிருந்து நேரடியாக நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இந்த அப் ​நேற்று இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 
இந்த புதிய அப்ளிகேஷனில் முகத்தோற்றத்தை கண்டறியும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போனில் இருக்கும் கேமரா புகைப்பட தொகுப்பிலிருக்கும் ஒரு படத்தை டேக் செய்யும்போது, இந்த ‘அப்’ புகைப்பட தொகுப்பில் உள்ள அதே முகம் உடைய நபரின் அனைத்து படத்தையும் ஸ்கேன் செய்து அவரின் குறிப்பிட்ட புகைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுக்க வழி செய்கிறது. 
‘மூமென்ட்ஸ் அப்’ மூலம் தொகுக்கப்பட்ட படங்களை தனிப்பட்ட வகையில் நண்பர்களுக்கு அனுப்பலாம். மேலும் பல ‘மூமென்ட்ஸ்’ தொகுப்பில் இருக்கும் ஒரு நண்பரை ஸ்கேன் செய்து புதிதாக மற்றொரு மூமென்ட்ஸையும் உருவாக்க முடியும். மேலும், பின்னணி இசையுடன் கூடிய வீடியோவையும் உருவாக்க முடியும். 
ஆண்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த அப்-ஐ கூகுள் ப்ளே மற்றும் அப் ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.



 
Top