GuidePedia

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தவின் விளக்கமறியல் தண்டனையை கம்பஹா நீதிமன்றம் நீடித்துள்ளது.
அவரது வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதனை தொடர்ந்து கம்பஹா நீதவான் டிகிரி ஜயதிலக்க, இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
பொதுத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின்பேரில் சரண குணவர்த்தன கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியல் தண்டனை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் சரண குணவர்த்தன ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



 
Top