புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் 90% ஆன சில்லறை கடைகளில் சிகரட் விற்கபடுவதில்லை.
முன்னைய நாட்களில் தில்லையடியில் போதைப் பொருட்கள் அதிகமாக பாவனையில் இருந்தது. தற்பொழுது தில்லையடிவாழ் இளைஞர்களின் சமூக விழிப்புணர்வு முயற்சிகளால் போதைப் பொருள் பாவனை சிறுக சிறுக ஒழிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக போதை பொருளுக்கு அடிமையாகும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகம் காணப்படுவது உண்மை. ஆயினும் தில்லையடியை பொறுத்தமட்டில் இளம் சந்ததியினர் போதை பொருளுக்கு அடிமையாகுவது மிகவும் சொற்பமாக உள்ளதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
இந்நிலை தொடர்ந்தால் இப்பிரதேசம் மிகவும் செழிப்பு மிக்க நகரமாக மாறுவதில் எவ்வித சந்தேகமுமில்லை.
“புகைத்தலை ஒழிப்போம்” என்ற எண்ணக் கருவில் செயற்படும் அணைத்து சக நண்பர்களுக்கும் சமூகத்தொண்டு நிறுவனங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
ஒன்று படுவோம்! புகைத்தலை ஒழிப்போம்!
Mafaz DX (from facebook) &
Hisham Px