GuidePedia

இலங்கையில் அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொடர்ந்தும் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
நிதி மற்றும் சக்திவளம், சமுர்த்தி போன்ற துறைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நேற்று வரையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நிலை ஏற்பட்டிருந்தது. எனினும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் நாளையே பெரும்பாலும் அமைச்சர்களுக்கான பதவிப் பிரமாணங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரியவருகிறது.
இதன்போது 50 அமைச்சரவை உறுப்பினர்களும் 40 பிரதியமைச்சர்களும் பதவியேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 
Top