GuidePedia

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு புதிய அரசாங்கத்தில் முக்கிய பதவியொன்று வழங்கப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டு அதன் பொறுப்பு சந்திரிக்காவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி இந்த புதிய நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
கடந்த 25ம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சந்திரிக்காவிற்கு பதவி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



 
Top