GuidePedia

உலக சந்தையில் மசகெண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தொடர்ந்து, எதிர்வரும் நாட்களில் நாட்டில் எரிபொருள் விலைக் குறைப்பை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எரிசக்தி, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போதும், குறையும் போதும் உள்நாட்டு எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம் குறித்து சூத்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதற்கேற்ப, மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையோ இந்த சூத்திரத்தின் அடிப்படையில் விலை மாற்றம் ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.



 
Top