GuidePedia

(கரீம் ஏ.மிஸ்காத்)
புத்தளம் குருணாகல் வீதியில் இன்று (28-08-15) அதிகாலை 3:00 மணியளவில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் 3 கடைகள் முற்றாக எரிந்து சாம்லாகின.
இதில் 2 கருவாட்டு கடைகளும், 1 பென்சி கடையுமே எரிந்து சாம்பலாகியுள்ளன.
மேற்படி கடைகளில் பரவிய தீயை அனைக்கும் பணியில், இலங்கை விமானப்படையினர் ஈடுபட்டனர். அத்தோடு புத்தளம் நகர சபை ஊழியர்களும், பொதுமக்களும் உதவினர்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். எம். நவவி அவர்களும் வருகை தந்து பார்வையிட்டார்.
தீ அனர்த்ததிற்கான காரணத்தை அறிய, புத்தளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.



 
Top