GuidePedia

காவற்துறையை அரசியல் மயப்படுத்துவதை நாங்கள் எந்த விதத்திலும் அனுமதிக்க போவதில்லை. சுயாதீன ஆணைக்குழுவை நியமித்து அதனை பலமுள்ளதாக முன்னெடுத்துச் செல்வதே எமது அடிப்படை நோக்கம் என  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வெளியாகும் இந்து பத்திரிகையின் ஆசிரியர் என். ராமுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் பலர் தமது காணி உரிமைகள் மீண்டும் கிடைத்துள்ளமை தொடர்பில் திருப்தியடைந்துள்ளனர்.
வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றுதலின் போது, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கில் சிலரை காணி உரித்துரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதே சிக்கலாக உள்ளது. இந்த காணிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு காணி உறுதிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இதன் போது பாதுகாப்பு சேவை போன்றவை அவசியமான வகையில் மேற்கொள்ளப்படும்.
காவற்துறை அதிகாரங்களை வழங்குவது சம்பந்தமாக ஆழமாக சிந்தித்து பார்க்க வேண்டிய விடயம். அது மீண்டும் மீண்டும் சிந்தித்து பார்க்க வேண்டிய விடயம்.
காவற்துறையை அரசியல் மயப்படுத்துவதை நாங்கள் எந்த விதத்திலும் அனுமதிக்க போவதில்லை. சுயாதீன ஆணைக்குழுவை நியமித்து அதனை பலமுள்ளதாக முன்னெடுத்துச் செல்வதே எமது அடிப்படை நோக்கம்.
இதன் பின்னர், மாகாண சபைகளுக்கான பொறுப்புகள் குறித்து ஆராய்ந்து பார்க்க முடியும். அரசியல் மயப்படுத்தப்பட்ட காவற்துறையின் செயற்பாடுகள் தொடர்பில் எமக்கு அனுபவமுள்ளது. அதற்குள் நாங்கள் பணியாற்றி இருக்கின்றோம்.
அந்த இடத்தில் இருந்து மறுப்பக்கம் திரும்பாமல் மாகாண சபைகள் சட்டம், அமைதி அடிப்படையில் செயற்படுமாயின் நாங்கள் அதற்கு இணங்குவோம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.



 
Top