ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைக்கவுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பில் சுதந்திரக் கட்சி மேலதிக நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தேசிய அரசாங்கம் தொடர்பில் இரண்டு கட்சிகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு மேலதிகமாக இந்த திருத்தங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென்று சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள உத்தேச திருத்தங்கள் தற்போது ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிமிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவர் அதனை பரீசீலித்துப் பார்த்துவிட்டு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள கபீர் ஹாசிம், சுதந்திரக் கட்சியின் நிபந்தனைகள் கடுமையானவைகள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
