GuidePedia

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்த சில கூட்டணிக் கட்சிகள் அதில் இருந்து விலகி, தனியான முன்னணி ஒன்றை ஸ்தாபிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேச விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இந்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆரம்ப கொள்கைகளுக்கு முரணாக செயற்படுவதாக இந்த கட்சிகள் தெரிவித்துள்ளன.
அத்துடன் தேசியப்பட்டியல் நியமனத்தின் போது தமது கட்சிகளுக்கு அநீதி ஏற்பட்டதாகவும் அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.



 
Top