GuidePedia

(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டம் புளும்பீல்ட் பிரிவில் 28.08.2015 அன்று காலை 09.00 மணியளவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 30 தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் போது தேயிலை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு தங்களை இவ்வாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

குளவி தாக்குதலுக்கு இலக்கான  30 பேரில் 27 பெண்களும் 3 ஆண்களும் அடங்குகின்றனர்.

குளவி தாக்குதலுக்கு இழக்கானவர்களில் 11 பெண்களும் 3 ஆண்களும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏனையோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதில் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைகாலமாக மலையகத்தில் குளவி தாக்குதலுக்கு இழக்கானவர்களின் எண்ணிகை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.






 
Top