GuidePedia

அரசியல் அமைப்பில் திருத்தங்களை செய்யும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
தற்போதைய அரசியல் அமைப்பின் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஓராண்டு காலப் பகுதியில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் திட்டம் உண்டு என அண்மையில் பிரதமர் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயேää அரசியல் அமைப்பு திருத்தங்களை செய்வது குறித்த நிபுணர் குழுவொன்றை பிரதமர் நியமித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பீட முன்னாள் பொறுப்பாளர் பேராசிரியர் எம்.ஓ.டீ.டி. சொய்சா, கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன உள்ளிட்டவர்கள் இந்த நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



 
Top