GuidePedia

சிறுவர் துஸ்பிரயோகத்தினை கட்டுப்படுத்துவதற்கு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
16 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கெதிராக, துஸ்பிரயோக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் குற்றவாளிகளுக்கு, முறையான வகையில் தண்டனைகளை பெற்றுக் கொடுக்க, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த,
இச்சபையின் அதிகார தலைவர் நடாஷா பாலேந்திரன், வயதுக்கு வராத சிறுவர்களிடம் மேற்கொள்ளப்படுகின்ற சிறு துஸ்பிரயோக நடவடிக்கைகளும், சட்டக்கோவையின் பிராகரம், தண்டனைக்கு உள்வாங்கப்படும் என்றார்.
இருப்பினும், சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக கொடுக்கப்படுகின்ற தண்டனைகள் போதுமானதாக இல்லை எனவும், இத்தகைய சூழ்நிலைக்கான காரணங்களை கண்டறியவே இப் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
சிறுவர் துஸ்பிரயோகம் மேற்கொள்ளுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதற்கான தண்டனைகள் மற்றும் பரிந்துரைகளை இக்குழுவின் மூலம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு, எதிர்காலத்தில் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



 
Top