GuidePedia

இலங்கையின் 8 ஆவது பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள 21 முஸ்லிம் உறுப்பினர்களை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வொன்றை தேசிய ரீதியிலான முஸ்லிம் சமூக அமைப்புக்கள் இணைந்து எதிர்வரும் 01 ஆம் திகதி இரவு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், தேசிய சூரா கவுன்ஸில் என்பன இணைந்து இதனை ஒழுங்கு செய்துள்ளது.
உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தியின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், சன்மார்க்க அறிஞர் ஏ.சீ.அகார் முஹம்மத், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் மற்றும் தேசிய சூரா சபை உலமாக்கள் பலரும் உரையாற்றவுள்ளனர்.



 
Top