GuidePedia

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது கைத்துப்பாக்கியை கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கருணா அம்மன் கூறியிருப்பதை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.
பிரபாகரனின் தலையில் வீழ்ந்த காயத்தை பார்க்கும்போது அவருடைய ஒருபுற மண்டையோடு வெளியேறியிருந்தது.
அவர், தமக்கு தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருந்தால், ரவையானது ஒருமுனையில் இருந்து மறுபக்கத்துக்கு வந்திருக்கும்.
ஆனால் அது இடம்பெறவில்லை. எனவே மோட்டார் குண்டு ஒன்றே அவரின் தலையில் தாக்கியிருக்க வேண்டும் என்று சரத் பொன்சேகா, இந்திய நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் மரணத்தின் பின்னர் பொலிஸார் மரண விசாரணையை நடத்தினர். மரபணு பரிசோதனையும் நடத்தப்பட்டது என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரனின் மனைவி மதிவதணியும் மகன் துவாரகாவும் ஷெல் வீச்சில் கொல்லப்பட்டதாக கருணா கூறியுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா, அது தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் தகவல்கள் இல்லை என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி-



 
Top