GuidePedia

இன ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே செயற்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் தேசிய அரசாங்க அமைச்சரவை ஒன்று பெரும்பாலும் எதிர்வரும் 4ஆம் திகதியன்று பதவியேற்றுக்கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி.திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, ஜோன் செனவிரட்ன, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்வார்கள்.
இவர்களுக்கு முக்கியமான சமூர்தி, நீர்வடிகால் அமைப்பு உட்பட்ட அமைச்சுக்கள் வழங்கப்படும். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரியிருந்த நிதியமைச்சு மற்றும் ஊடக அமைச்சு என்பவற்றை வழங்குவதற்கு ஐக்கியதேசியக்கட்சி இணங்கவில்லை.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியின் போது இந்த இரண்டு அமைச்சுக்களில் பாரிய பிரச்சினைகள் இருந்தன.
எனவே மீண்டும் காபன் கொப்பியாக இந்த அமைச்சுக்கள் இருக்க முடியாது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கருத்தாக இருந்தது.
இதனையடுத்து அவை இரண்டும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளது.



 
Top