மஹிந்த ராஜபக்ஷ பதவி மோகத்தை கைவிட்டு தேர்தலிலிருந்து விலகி சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலின் பின் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
மேலும் வேட்புமனுத் தாக்கலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைத்துவ அதிகாரத்துடன் செயற்பட்டிருந்தால் கட்சி பிளவுபட்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதம் மிகவும் நுட்பமான முறையில் தயாரிக்கப்பட்டதாகும். இதன்மூலம் ஜனாதிபதியின் சாணக்கியத்தை தெரிந்து கொள்ளலாம்.
வேட்புமனுத்தாக்கலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைமைத்துவ அதிகாரத்னுடன் செயற்பட்டிறிருந்தால் இந்தக் கட்சிய பிளவு பட்டிருக்கும். கட்சி மீது ஆதரவு இருந்தமையால்தான் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இடமளித்தார் என அவரே குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்தியது மஹிந்தவின் ஆட்சியாகும். என்றாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்தியுடன் செயற்பட்டதால் கட்சி பாதுகாக்கப்பட்டது.
தேர்தலின் பின் மஹிந்த ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்படுவார் : மேர்வின் சில்வா
இந்த செய்தி / ஆக்கத்தை SHARE செய்து உதவுங்கள்
-----------------------------------------------------------------
முக்கிய குறிப்பு...>>>>
ஒன்லைன்சிலோன் வாசகர் கவனத்திற்கு,
எமது தளத்தில் வெளியிடப்படும் செய்திகள்/ ஆக்கங்கள் எமது நிர்வாகத்தின் கொள்கையோ நிலைப்பாடோ அல்ல. அந்த தகவல்களை அனுப்பி வைப்பவர்களே அதற்கு முழு பொருப்பாவார்கள். சமூக இணையத்தளம் என்ற அடிப்படையில் எமக்கு அனுப்பிவைக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்த பின் அவற்றை நாங்கள் வெளியிடுகின்றோம்.
பிரதம ஆசிரியர்,
ஒன்லைன் சிலோன்
