வரும் பதினேழாம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலின் போது இடம்பெறக்கூடிய மோசடிகளை உடனே அறிவிப்பதற்காகவும், வாக்களிப்பு நிலைய கடமைகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் குறுந்தகவல் சேவை ஒன்று இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த குறுந்தகவல் சேவையை EC <SPACE> EV <SPACE> குறித்த மாவட்டம் <SPACE> முறைப்பாட்டை பதிவு செய்து 2343 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைப்பதன் மூலம் நேரடியாக தேர்தல்கள் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.