கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் அலரி மாளிகையில் இடம்பெற்றதாக கூறப்படும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் அரச விரோத சத்தித் திட்டத்துக்கு எதிராக சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி ஒன்றில் நேற்று ஒலிபரப்பாகிய நிகழ்சியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேற்படி அரச விரோத சதித் திட்டத்துக்கு எதிராக சாகும்வரையான உண்ணவிரத போராட்டம் நடத்த வேண்டும் என தான் முன்வைத்த ஜோசனைக்கு ஜே.வி.பி போதுமான பெறுமதி்யை வழங்கவில்லை. தான் கட்சியில் இருந்து விலக இதுவும் ஒரு பிரதான காரணம் எனவும் சோமவன்ஸ அமரசிங்க கூறியுள்ளார்.
