19ஆவது திருத்தச சட்டமூலம் தொடர்பில் அரசியல் கட்சிகளால் நேற்று திங்கட்கிழமை மாலை வரை முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து ஆராயவும், அதனை ஒழுங்குபடுத்துவதற்கும் ஆறுபேர் கொண்ட விசேட குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா, எம்.பிக்களான எம்.ஏ.சுமந்திரன், அநுர பிரியதர்ன யாப்பா, ரஜீவ விஜேசிங்க, பைஸர் முஸ்தபா ஆகியோர் ஜனாதிபதியால் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இன்று செவ்வாய்க்கிழமை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசு எதிர்பார்த்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விசேட குழுவை நேற்று நியமித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்தக் குழு நியமிக்கப்பட்டது. 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் திருத்தங்களை முன்வைக்க நேற்று மாலை 5.30 மணிவரை அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கமைய அரசியல் சாட்சிகளால் முன்வைக்கப்படும் திருத்தங்கள் குறித்து இந்த விசேட குழு ஆராய்ந்து அதனை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
19 இன் திருத்தங்களை ஆராய விசேட குழுவை நியமித்தார் ஜனாதிபதி
இந்த செய்தி / ஆக்கத்தை SHARE செய்து உதவுங்கள்
-----------------------------------------------------------------
முக்கிய குறிப்பு...>>>>
ஒன்லைன்சிலோன் வாசகர் கவனத்திற்கு,
எமது தளத்தில் வெளியிடப்படும் செய்திகள்/ ஆக்கங்கள் எமது நிர்வாகத்தின் கொள்கையோ நிலைப்பாடோ அல்ல. அந்த தகவல்களை அனுப்பி வைப்பவர்களே அதற்கு முழு பொருப்பாவார்கள். சமூக இணையத்தளம் என்ற அடிப்படையில் எமக்கு அனுப்பிவைக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்த பின் அவற்றை நாங்கள் வெளியிடுகின்றோம்.
பிரதம ஆசிரியர்,
ஒன்லைன் சிலோன்