GuidePedia

கொல்கத்தாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் இரண்டு ஓட்டங்களால் வெற்றி பெற்ற சென்னை லீக்சுற்றில் தனது ஆறாவது வெற்றியை பதிவு செய்து கொண்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் ஐ.பி.எல்.தொடரின் 28ஆவது லீக் போட்டி நேற்று சென்னையில் இடம்பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன் பிரகாரம் துடுப்பெடுத்தாடிய சென்னை 20ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 134ஓட்டங்களை பெற்றது.
சென்னை சார்பாக துடுப்பாட்டத்தில் டு பிளஸிஸ் அதிக பட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள பந்து வீச்சில் கொல்கத்தாவின் சாவுலாஇ ரஷல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு வெற்றி இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தாவின் அணித்தலைவர் கம்பீர் ஓட்டமெதனையும்பெறாது ஆட்டமிழக்க ரொபின் உத்தப்பா அதிகபட்சமாக 39ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இருப்பினும் அவ்வணியின் ஏனைய வீரர்கள் விரைவாக அரங்கு திரும்பினர். இறுதியில் கொல்கத்தாவின் டூஸ்சாட் போராடி 38ஓட்டங்களைப் பெற்றபோதும் 20ஓவர்கள் நிறைவில் அவ்வணியால் 9விக்கெட்டுக்களை இழந்து 132ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது.



 
Top