GuidePedia

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலியில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர் :
நான் ஸ்ரீ.சு.கவின் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் கலந்துரையாடலுக்கும் சம்மதம் தெரிவித்தேன்.
மேலும் மே தின பேரணியில் கலந்துக்கொள்ளுமாறு கட்சி செயலாளர் முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார். அதற்கும் நான் சம்மதித்தேன். ஆனால் மஹிந்த அதனை புறக்கணித்தார்.
ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையில் என்னால் வேறு எதனை செய்யமுடியும். எனவே கட்சியின் நலனுக்காக எதிர்வரும் நாட்களில் மகிந்தவுடன் இணைந்து செயற்பட நான் விடும்புகிறேன். கட்சியின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே நான் செயற்படுகிறேன். என அவர் மேலும் தெரிவித்தார்.



 
Top