GuidePedia

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று நிதி குற்ற புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவுள்ளதாக சட்டதரணி யு.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் இன்று அவர் ஆஜராகுவது வாக்குமூலம் வழங்குவதற்கல்ல எனவும், வாக்குமூலம் வழங்குவதற்காக வேறு ஒரு தினத்தை பெற்றுக்கொள்வதற்காகவே என சட்டதரணி குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை பசில் ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு நிதிக் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஆயத்தமாக உள்ளார்கள் என பொலிஸ் ஊடக பேச்சளாரும் பிரதி பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.



 
Top