GuidePedia

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

சர்வதேச மலேரியா ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மலேரியா அற்ற இலங்கையை உருவாக்கும்அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திட்கு அமைவாக KKYXPRESS சமூக ஊடக வலையமைப்பு, பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் மலேரியா தடுப்பு பிரிவுடன் இணைந்து இலவசமலேரியா இரத்தப் பரிசோதனை மற்றும் வெளிநாடு செல்வோருக்கான மலேரியா தடுப்பு மருந்துவழங்கல் முகாம் ஒன்றினை 24.04.2015  நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்து நடாத்தியது.

 காத்தான்குடி கடற்கரை வீதி மத்திய கல்லூரி முன்பாக  இடம்பெற்ற  இம்முகாமில் மட்டக்களப்புபிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மேகலா ரவிச்சந்திரன், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிநஸீருதீன் ஆகியோரின் வழிகாட்டலில் மலேரியா தடுப்பு பிரிவின் வெளிக்கள உத்தியோகஸ்தர்களான சு.சுஜேந்திரன்முராஜ்ஜனனன் ஆகியோருடன்  இப்பரிசோதனை  முகாம் மிகவும் சிறப்பாகநடைபெற்றது.

இவ்  இலவச பரிசோதனை முகாமில் ஆண்கள்,பெண்கள்  உட்பட  ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு இரத்தப் பரிசோதனை  மேற்கொண்டதுடன் குறுகிய நாட்களுக்குள்  இந்தியா  போன்ற  மலேரியா தொற்றுள்ள  நாடுகளுக்கு  செல்லவுள்ளோருக்கு  இலவசமாக  மலேரியா  தடுப்பு மாத்திரைகளும் வழங்கப்பட்டது.



 
Top