முகத்தை முற்றாக மறைக்கும் தலைக்கவசம்அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக கண்டி நகரில் இன்று (26) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சங்கம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
கன்னொருவை வீதியூடாக கண்டி நகரம் வரை பேரணியாக சென்றவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முகத்தை முற்றாக மறைக்கும் தலைக்கவசம் அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் தமது பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.