GuidePedia

அமெரிக்காவில் தந்தை ஒருவர், மகனது முகத்தை தனது தாடையில் பச்சை குத்தியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ்(Texas) மாநிலத்தில் உள்ள ஹவ்ஸ்டன் நகரைச் சேர்ந்த கிரிஸ்டியன் ஸெக்ரிஸ்ட்(Christian Sechrist Age - 20) என்பவருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
தனது குழந்தையின் மீது வைத்திருக்கும் பாசத்தை உலகத்துக்கு வெளிப்படுத்துவதற்காக இவர் புதிய முயற்சியை கையாண்டுள்ளார்.
அதாவது, கடுமையான வலியையும் பொருட்படுத்தாமல், ஆசை மகனது முகத்தை தனது தாடையில் பச்சை குத்தியுள்ளார்.
இந்த புகைப்படத்தினை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு நண்பர்கள் சிலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இந்த செயலால் உனது அழகையும், அமைப்பையும் கெடுத்துக்கொண்டாய் என கூறியுள்ளனர்.



 
Top