(க.கிஷாந்தன்)
கடந்த 23ம் திகதி பெய்த கடும் மழை காரணமாக வேவெளி தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 28 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தோட்ட ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24.04.2015 அன்று பகல் உணவு வழங்கப்படவில்லை எனவும் தோட்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இதுவரை சம்பவ இடத்துக்கு வருகைதரவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய குடியிருப்புக்களை அமைத்து தருமாரும் கோரி ஒருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.
வேவேர்லி தோட்டத்தை சேர்ந்த 40 வயதுடைய கந்தையா தர்மலிங்கம் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
எனினும் மத்திய மாகாண சபை உறுப்பினா் இராஜாராம் சம்பவ இடத்திற்கு சென்று கலந்துரையாடிய பின் தர்மலிங்கம் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.